top of page

Meera Parasuraman, translated into the Tamil by the poet

என் வீடு என்னுடன் நிறைய பேசி கொண்டிருக்கிறது

00:00 / 01:04

படுக்கை அறையில் இருக்கும் அலமாரி கதவு
எப்போதும் ஒரே போல்
கிரீச் என்று சத்தம் போடுகின்றது என்று
என் மூளை சொல்கிறது.
வீட்டோடு எந்த பகுதியில்,
எந்த கதவு மூடி திறக்கிறது என்று,
ரொம்ப கவனமாக கேட்காமலே
என்னால் சொல்ல முடியும்.
ஒரு வேளை போன பிரவியில்,
நான் ஒரு காவல் நாயாக இருந்தேநோ என்னவோ.
இல்லை, ஆன்டெனாக்கள் வைத்த
ஒரு பூச்சியாக
நான் இருந்திருக்கலாம்.
மரணம் பக்கம் வரும் போது
என்னை எச்சரிக்கை படுத்தும்
ஆன்டெனாக்கள்.
ஆனால், நான் ஏன்
மரணத்தை பற்றி
பேசுகிறேன்?
ஒவ்வொரு நாளும்,
ஓவ்வொரு வினாடியும்,
மூச்சு விட்டு,
உயிரோடு இருந்து,
என்னுடன் பேசுகின்ற வீட்டில்
நான் இருக்கும் போது?

 

En Veedu Ennudan Niraiya Pesi Kondirukkiradhu

Padukkai arayil irukkum alamari kadavu
Eppodum ore pol
Kireech endru sattham podugindradhu endru
En moolai solgiradhu.
Veetodu endha paguthiyil
Endha kadavu moodi
Thirakugindradhu endru
Romba gavanamaga ketkamale
Ennal solla mudiyum.
Oru velai ennodu pona piraviyil
Nan oru kaval naiaga iruntheno ennavo.
Illai, antennakkal vaitha oru poochiyaga
Nan irunthirukkalam.
Maranam pakkam varum podhu
Ennai echarikkai paduthum
Antennakkal.
Aanal, nan yen maranathai patri
Pesugiren?
Ovovoru naalum,ovovoru vinadiyum,
Moochu vittu,

Uyirodu irunthu,
Ennudan Pesugindra veetil
Nan irukkumpodu?

 

bottom of page